அமித் பங்கல் - இந்தியாவின் முதலாவது குத்துச் சண்டைப் பதக்கம்
September 28 , 2019 2149 days 803 0
ரஷ்யாவின் எகடெரின்பெர்க்கில் நடைபெற்ற உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய குத்துச் சண்டை வீரர் அமித் பங்கல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
இவர் 52 கிலோ எடைப் பிரிவு கொண்ட இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியனான ஷாகோபிடின் சோயிரோவ் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார்.
இரண்டாம் நிலை வீரரான பங்கல் உலகப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த முதலாவது இந்திய ஆண் குத்துச் சண்டை வீரராக உருவெடுத்துள்ளார்.
மேலும் இதே போட்டியில் மணிஷ் கௌசிக் (63 கிலோ எடைப் பிரிவு) வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
உலக சாம்பியன்ஷிப்பின் ஒரு பதிப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றது இதுவே முதல் முறையாகும்.
கடந்த வெற்றியாளர்கள்: விஜேந்தர் சிங் (2009), விகாஸ் கிரிஷன் (2011), சிவா தாபா (2015) மற்றும் கௌரவ் பிதூரி (2017).