TNPSC Thervupettagam

அமுர் பருந்துகளின் வலசை

November 30 , 2025 25 days 90 0
  • அமுர் பருந்துகள் ஒவ்வொரு இலையுதிர் காலத்திலும் வடகிழக்கு இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு 5,000 முதல் 6,000 கி.மீ. வரை இடைவிடாமல் பயணித்து வலசை போகின்றன.
  • 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) ஆனது இலகுரக அலை பரப்பிகளைப் பயன்படுத்தி அபாபாங், ஆலாங் மற்றும் அஹு ஆகிய மூன்று பருந்துகளைக் கண்காணித்தது.
  • அபாபாங் 6 நாட்கள் 8 மணி நேரத்தில் 6,100 கி.மீ. பறந்து தான்சானியாவினை அடைந்தது; ஆலாங் 6 நாட்கள் 14 மணி நேரத்தில் 5,600 கி.மீ. பறந்து கென்யாவினை அடைந்தது; அஹு 5 நாட்களில் 5,100 கி.மீ. பயணித்து சோமாலியாவினை அடைந்தது.
  • 2012 ஆம் ஆண்டில் நாகாலாந்தில் மிகப் பெருமளவில் பதிவான வேட்டையாடலைத் தொடர்ந்து, இந்தக் கண்காணிப்புத் திட்டம் தொடங்கப்பட்டது என்பதோடு மேலும் 2016 ஆம் ஆண்டில் வலசை போகும் இனங்கள் தொடர்பான உடன்படிக்கையின் கீழ் இந்தியா கொன்றுண்ணி பறவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • வடகிழக்கு இந்தியாவில் 2 முதல் 3 வாரங்கள் வரை இப்பருந்துகள் தங்கி, அரேபியக் கடலைக் கடப்பதற்கு முன்னதாக உடலில் கொழுப்பு இருப்புக்களை உருவாக்க கரையான் கூட்டங்களை உண்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்