டிட்வா புயல் ஆனது இரண்டு பெண் அமுர் பருந்துகளை/வல்லூறுகளை அவற்றின் வழக்கமான வலசைப் பாதையிலிருந்து விலக்கி தமிழ்நாட்டின் கோடியக்கரை பாதையில் தள்ளியது.
இந்தப் பறவைகள் வழக்கமாக சைபீரியா, வடக்கு சீனா மற்றும் மங்கோலியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவிற்கு சுமார் 40,000 கி.மீ தூரம் பயணிக்கின்றன.
அவற்றின் பொதுவான இந்திய வலசைப் பாதை குஜராத்-மகாராஷ்டிரா வழியாகும்.
கோடியக்கரையில் முன்னதாக 2020 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மற்ற புயல்களின் போது அமுர் பருந்துகளின் இயக்கம் பதிவானது.
அமுர் பருந்துகளானது, சிறிய கொன்றுண்ணிகள் மற்றும் IUCN அமைப்பின் கீழ் தீ வாய்ப்பு கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அவை இடம்பெயர்ந்த இனங்கள் பற்றிய உடன்படிக்கையின் (CMS) பிற்சேர்க்கை II மற்றும் 1972 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் IV ஆம் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளன.