அமுர் புலி அல்லது சைபீரியன் புலி, ரஷ்யாவின் தொலைதூரக் கிழக்கில் உள்ள உடேஜ், நானாய் மற்றும் ஓரோச் போன்ற பழங்குடியினக் குழுக்களால் ஓர் ஆன்மீக உயிரினமாக மதிக்கப்படுகிறது.
'அம்பா' என்று அழைக்கப்படும் இந்தப் புலிகள், ஷாமனிக் சடங்குகள் மற்றும் வேட்டை சார்ந்த நம்பிக்கைகளுக்கு மையமான டைகா டைகா பழங்குடியினரின் உறவாகவும் எஜமானராகவும் பார்க்கப்படுகிறது.
புலியைக் கொல்வது தடை செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது; அது இறந்தால், அது சாக்தமா எனப்படும் புனித மரக் கூடுகளில் முழுமையான சடங்குகளுடன் புதைக்கப் படுகிறது.
சில பழங்குடியினர்கள் புலி-மனித திருமணங்களையும் ஆன்மீகப் பயணங்களுக்காக ஷாமன்கள் புலிகளாக உருவெடுப்பதையும் நம்புகிறார்கள்.
புலி சுற்றுச்சூழலுக்கு அப்பாற்பட்ட கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்பதோடு இது டைகா இனச் சமூகங்களின் அடையாளம் மற்றும் மரபுகளைக் குறிக்கிறது.