அமெரிக்க இந்திய உத்திசார் கூட்டாண்மை மன்றத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது
October 30 , 2022 1086 days 517 0
அமெரிக்க இந்திய உத்திசார் கூட்டாண்மை மன்றத்தின் (USISPF) வாழ்நாள் சாதனையாளர் விருதானது HCL நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார்க்கு வழங்கப் பட்டுள்ளது.
இது தொழில்நுட்பத் துறையில் அவரது பங்களிப்பு மற்றும் கல்வித் துறையில் அவர் மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
இவர் தனது ஷிவ் நாடார் அறக்கட்டளை மூலம் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை சமுதாய நலத் திட்டங்களில், குறிப்பாக கல்வித் துறையில் முதலீடு செய்துள்ளார்.
அவரது அறக்கட்டளை நிறுவனங்களின் தாக்கமானது, தாழ்மையான, புவியியல் ரீதியாக, தொலைதூரப் பகுதிகள் போன்ற பகுதிகளில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்கிய திறன்மிக்க மாணவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறது.