அமெரிக்க உச்சி மாநாடு 2022
June 14 , 2022
1069 days
451
- ஒன்பதாவது அமெரிக்க உச்சி மாநாடு (2022) சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடத்தப் பட்டது.
- இந்த உச்சி மாநாட்டின் கருத்துருவானது, "ஒரு நிலையான, நெகிழ்திறன்மிக்க மற்றும் சமமான எதிர்காலத்தை உருவாக்குதல்" என்பதாகும்.
- அமெரிக்கா இந்த உச்சி மாநாடு நடைபெறுவதற்கான இடத்தையும் அதன் பங்கேற்பாளர்களையும் ஒரு புரவலராக தேர்ந்தெடுக்கிறது.
- இந்த ஆண்டின் உச்சி மாநாட்டிற்கு, கியூபா, நிகரகுவா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளை அமெரிக்கா அழைக்கவில்லை.
- ஏனெனில், இந்த நாடுகளில் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் தேர்ந்து எடுக்கப் பட்ட தலைவர்கள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Post Views:
451