TNPSC Thervupettagam

அமெரிக்க தேசியப் பாதுகாப்பு உத்தி 2025

December 11 , 2025 15 hrs 0 min 23 0
  • டிரம்ப் நிர்வாகம் இறுதியாக அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேசியப் பாதுகாப்பு உத்தியை (NSS) வெளியிட்டது.
  • அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் வழக்கமாக ஒவ்வொரு வெள்ளை மாளிகை பதவிக் காலத்திலும் ஒரு தேசியப் பாதுகாப்பு உத்தியை வெளியிடுவார்கள்.
  • 2022 ஆம் ஆண்டில் ஜோ பைடனால் வெளியிடப்பட்ட கடைசி ஆவணம், "ஆபத்தான" ரஷ்யாவை கட்டுப்படுத்தும் அதே வேளையில் சீனாவை விடப் போட்டித் தன்மையுடன் வெற்றி பெறுவதற்கு முன்னுரிமை அளித்தது.
  • டிசம்பர் 2017 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முதல் கால NSS உடன் ஒப்பிடும்போது, ​​புதிய ஆவணம் குறிப்பிடத்தக்க வகையில் குறுகியதாகவும் MAGA சார்ந்ததாக மிகவும் கவனம் செலுத்துவதாகவும் உள்ளது.
  • "அமெரிக்கா முதலில்" முன்னுரிமைகள் ஆனது, அமெரிக்கா அதன் முக்கிய தேசிய நலன்களாக வரையறுக்கும் மையத்தின் நோக்கத்தை கணிசமாகக் குறைக்கின்றன.
  • இது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் தீவிர மறுசீரமைப்பை வகுத்தது.
  • இது நீண்ட கால வல்லரசின் கவனத்தை உலகளாவிய மையத்திலிருந்து அதன் பிராந்தியத்திற்கு மாற்றுகிறது.
  • ஐரோப்பாவானது "நாகரிக அழிப்பை" எதிர்கொள்வதாகவும், வெகு ஜன இடம் பெயர்வை நீக்குவதில் முதன்மையானதொரு முன்னுரிமையை அளிப்பதாகவும் அது விமர்சிக்கிறது.
  • வளர்ந்து வரும் சீனாவை எதிர்கொள்ள ஆசியாவில் கவனம் செலுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால அழைப்புகளிலிருந்து, லத்தீன் அமெரிக்காவை அமெரிக்க நிகழ்ச்சி நிரலின் உச்சத்திற்கு உயர்த்துகிறது.
  • ஒரே வல்லரசாக இருக்க பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அது முறித்துக் கொண்டிருந்தது.
  • "உலக ஆதிக்கம் என்ற ஒரு துரதிர்ஷ்டவசமான கருத்தை அமெரிக்கா நிராகரிக்கிறது" என்று அந்த உத்தி எடுத்துரைக்கிறது.
  • சீனா உட்பட பிற சக்திகள் ஆதிக்கம் செலுத்துவதை அமெரிக்கா தடுக்கும் என்றும் அது கோரியது.
  • ஆனால் "உலகின் அனைத்து பெரிய மற்றும் நடுத்தர சக்திகளின் செல்வாக்கைக் குறைக்க இது தனது இரத்தத்தையும் செல்வத்தையும் வீணாக்குவதை அர்த்தப் படுத்துவதில்லை" என்றும் அது மேலும் கோரியது.
  • இடம்பெயர்வுடன் தொடங்கி, "நமது அரைக் கோளத்தில் அவசர அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்ய நமது உலகளாவிய இராணுவ இருப்பை மறுசீரமைக்க" இந்த உத்தியானது அழைப்பு விடுத்தது.
  • "பெரும் குடியேற்ற சகாப்தம் முடிவுக்கு வர வேண்டும்" என்று அந்த உத்தி கோரியது.
  • டிரம்பின் கீழ் அமெரிக்கா, தீவிர வலதுசாரி கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப, ஐரோப்பாவில் இதே போன்ற நோக்கங்களை தீவிரமாகத் தொடரும் என்பதை இந்த உத்தி தெளிவுபடுத்தியது.
  • உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க இது முயல்கிறது.
  • இந்த உத்தியானது ஐரோப்பியர்கள் பலவீனமாக இருப்பதாக குற்றம் சாட்டியது.
  • லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க ஆதிக்கத்தை அழுத்துவதை இந்த உத்தி துணிச்சலான வார்த்தைகளில் பேசுகிறது என்பதோடு அங்கு டிரம்ப் நிர்வாகம் கடலில் போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தாக்கி வருவதோடு, வெனிசுலா உட்பட இடது சாரித் தலைவர்களை வீழ்த்தத் தலையிடுவதோடு, மேலும் பனாமா கால்வாய் போன்ற முக்கிய வளங்களையும் கைப்பற்ற முயல்கிறது.
  • இந்த உத்தி டிரம்ப்பை இரண்டு நூற்றாண்டு பழமையான மன்றோ கோட்பாட்டை நவீனமயமாக்குவதாக சித்தரித்தது என்ற நிலையில் அதில் அப்போதைய இளம் அமெரிக்கா லத்தீன் அமெரிக்காவை தன்னைப் போன்ற போட்டிச் சக்திகளுக்கு ஒரு தடையாக அறிவித்தது.
  • இந்த உத்தியானது நீண்ட காலமாக வாஷிங்டனை விழுங்கிய மத்திய கிழக்கிற்கு ஒப்பீட்டளவில் சிறிய கவனத்தையே செலுத்தியது.
  • இஸ்ரேல் பாதுகாப்பாக இருப்பது அமெரிக்காவின் ஒரு முன்னுரிமையாக இருந்தது ஆனால் முதல் டிரம்ப் நிர்வாகத்தில் கூட இஸ்ரேல் பற்றிய முழுமையான மொழியைப் பயன்படுத்தவில்லை.
  • சீனாவைப் பொறுத்தவரை, இந்த உத்தி "சுதந்திரமான மற்றும் திறந்த" ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான அழைப்புகளை மீண்டும் மீண்டும் செய்தது ஆனால் ஒரு பொருளாதாரப் போட்டியாளராக அந்த நாட்டின் மீது அதிக கவனம் செலுத்தியது.
  • பெய்ஜிங் உரிமை கோரும் சுயாட்சி ஜனநாயகமான தைவானை டிரம்ப் விட்டுக் கொடுப்பாரா என்பது குறித்து பல ஊகங்களுக்குப் பிறகு, அமெரிக்கா பல தசாப்தங்களாக தொடர்ந்து நீடிக்கும் நிலையை ஆதரிக்கிறது என்பதை இந்த உத்தி தெளிவுபடுத்தியது ஆனால் சீனாவிடமிருந்து தைவானின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அதிகம் பங்களிக்க என்று நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரியாவையும் அது அழைத்தது.
  • இந்த உத்தியானது எதிர்பார்க்கக் கூடிய வகையில் ஆப்பிரிக்காவில் சிறிதும் கவனம் செலுத்தவில்லை என்பதோடு அமெரிக்கா "தாராளவாத சித்தாந்தத்திலிருந்து" மற்றும் "உதவி சார்ந்த உறவிலிருந்து" விலகி, முக்கியமான கனிமங்களைப் பாதுகாப்பது போன்ற இலக்குகளை வலியுறுத்த வேண்டும் என்று கூறுகிறது.
  • இது டிரம்பின் வெளியுறவுக் கொள்கை பார்வையை "நெகிழ்வான யதார்த்த வாதத்தின்" ஒன்றாக அமைத்ததோடு மேலும் அமெரிக்காவின் கொள்கையானது எல்லாவற்றிற்கும் மேலாக "அமெரிக்காவிற்கு எது சரியாக இருக்கும்" என்பதன் மூலம் இயக்கப்படும் என்றும் கூறியது.
  • இது வாஷிங்டனுக்குப் புது தில்லியின் உத்திசார் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகிறது மற்றும் உலகளாவியப் பாதுகாப்பு மற்றும் உத்திசார் முயற்சிகளில் இந்தியாவை ஒரு முக்கியப் பங்குதாரராக அடையாளம் காட்டுகிறது.
  • பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் புது தில்லியுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதே இதன் நோக்கம்.
  • வட கொரியாவை அணு ஆயுதமற்றதாக்குவது குறித்த எந்தக் குறிப்பையும் அது கோர வில்லை.
  • 2026 ஆம் ஆண்டில் பியோங்யாங்குடன் (வட கொரியா நாடு) ஒரு இராஜதந்திர முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்க வாஷிங்டன் முயற்சிக்கும் என்ற ஊகத்தைத் தூண்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்