அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட 43 நாட்கள் அளவிலான முடக்கத்திற்குப் பிறகு அமெரிக்க அரசாங்கம் மீண்டும் திறக்கப்பட்டது.
மலிவு விலையிலான பராமரிப்புச் சட்டத்தின் (ACA) கீழ் சுகாதாரக் காப்பீட்டு மானியங்களின் நீட்டிப்பு சேர்க்கப் பட விட்டாலன்றி ஒப்புதல் அளிக்கப்படாது என்று ஜனநாயகக் கட்சியினர் நிதி மசோதாவை அங்கீகரிக்க மறுத்ததால் இந்த முடக்கம் தொடங்கியது.
குடியரசுக் கட்சியினர் ACA மானியங்களைச் சேர்க்க மறுத்து விட்டதால், இது காங்கிரசில் ஒரு முடக்கத்தினை ஏற்படுத்தியது.
அங்கீகரிக்கப்பட்ட நிதி மசோதா இல்லாமல், கூட்டாட்சித் துறைகள் நிதி இல்லாமல் ஆகின என்பதோடுஇது அரசாங்க முடக்கத்தைத் தூண்டியது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை கூட்டாட்சி செயல்பாடுகளை மீட்டெடுக்கும் ஒரு தற்காலிக நிதி மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
ஜனநாயகக் கட்சியினருடனான சர்ச்சையின் மையமாக இருந்த மலிவுப் பராமரிப்புச் சட்டத்தின் (ACA) கீழ் சுகாதாரக் காப்பீட்டு மானியங்கள் இந்த மசோதாவில் சேர்க்கப் படவில்லை.