அமெரிக்காவும் ஈரானும் தங்களது ராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டுவரவும், ஹார்முஸ் நீர்ச்சந்தி மற்றும் ஓமன் வளைகுடாவில் உள்ள கடற்படை முற்றுகையை விலக்கிக் கொள்ளவும் ஒரு முதற்கட்ட அமைதி ஒப்பந்தத்தை அறிவித்தன.
இந்த ஒப்பந்தம் 60 நாள் பதற்றத்தைத் தணிக்கும் வழிமுறையாகச் செயல்படும் ஒரு அவசரகால புரிந்துணர்வு ஒப்பந்தமே தவிர, இறுதியான அமைதி ஒப்பந்தம் அல்ல.
இது உடனடி போர்நிறுத்தம், ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக கட்டணமில்லா சர்வதேச வர்த்தக கப்பல் போக்குவரத்து மற்றும் உடனடி கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு வழி வகை செய்கிறது.
60 நாள் பேச்சுவார்த்தைக் காலத்தில் முடக்கப்பட்ட 24 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஈரானிய சொத்துக்களை கட்டம் கட்டமாக விடுவிக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.
இந்த ஒப்பந்தம் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தவும், எண்ணெய் விலையைக் குறைக்கவும், இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கான முக்கிய பாதையான ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.