அமெரிக்கா தலைமையிலான அதிகப்படியான திறன் முன்னெடுப்பு
October 13 , 2026 25 days 159 0
முக்கிய தொழில்களில் உள்ள கட்டமைப்பு ரீதியான அதிகப்படியான திறனைக் கையாள்வதற்கான கூட்டு அறிக்கையில் அமெரிக்கா மற்றும் 13 பிற பொருளாதார நாடுகளுடன் இந்தியாவும் இணைந்தது.
இந்தக் குழு வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள் (EVs), மின்கலன்கள், இரசாயனங்கள், அடிப்படை குறைகடத்திகள் மற்றும் சூரிய மின் தகடுகள் ஆகிய ஐந்து துறைகளில் கவனம் செலுத்துகிறது.
உலகளாவிய வர்த்தகத்தை சிதைக்கும் அதிகப்படியான உற்பத்தி மற்றும் சந்தை அல்லாத கொள்கைகளை எதிர்கொள்வதை பங்கேற்கும் பொருளாதார நாடுகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
தரவுகளைப் பகிரவும், கூட்டு நடவடிக்கைக்கான கட்டமைப்பை உருவாக்கவும் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக தொழில்நுட்ப அளவில் சந்திக்க நாடுகள் திட்டமிட்டுள்ளன.
இந்த முன்னெடுப்பானது 2016 ஆம் ஆண்டில் G20 அமைப்பில் தொழில்துறை அதிகப் படியான திறன் குறித்து முன்னதாக நடைபெற்ற விவாதங்களைத் தொடர்ந்து மேற் கொள்ளப்படுகிறது.