TNPSC Thervupettagam

அமெரிக்கா- ரஷ்யா புளூட்டோனியம் ஒப்பந்தம் ரத்து

October 13 , 2025 14 hrs 0 min 22 0
  • 2000 ஆம் ஆண்டில் அமெரிக்காவுடன் கையெழுத்திடப்பட்ட புளூட்டோனியம் மேலாண்மை மற்றும் இடமாற்ற ஒப்பந்தத்திலிருந்து (PMDA) விலகுவதற்கு ரஷ்யாவின் நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் அளித்தது.
  • PMDA ஆனது இரு நாடுகளும் தலா 34 டன் (சுமார் 17,000 அணு ஆயுதங்களை உருவாக்கப் போதுமானது) ஆயுதத் தரப் பயன்பாட்டிற்கான புளூட்டோனியத்தினை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரியது.
  • இந்த ஒப்பந்தம் ஆனது 2011 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
  • புளூட்டோனியத்தினை கலப்பு ஆக்சைடு (MOX) எரிபொருளாக மாற்றுவதன் மூலமோ அல்லது உலைகளில் கதிர்வீச்சு நீக்கம் செய்வதன் மூலமோ அதன் பரவல் அபாயங்களைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டது.
  • அமெரிக்கத் தடைகள், நேட்டோ விரிவாக்கம் மற்றும் அமெரிக்க புளூட்டோனியம் அகற்றும் முறைகளில் ஒருதலைபட்ச மாற்றங்கள் ஆகியவற்றைக் காரணம் காட்டி, ரஷ்யா 2016 ஆம் ஆண்டில் அதன் செயல்படுத்தலை நிறுத்தியது.
  • ரஷ்யாவும் அமெரிக்காவும் இன்றும் 8,000 அணு ஆயுதங்களை வைத்து இருக்கின்றன, என்ற நிலையில் இது 1986 ஆம் ஆண்டில் 73,000 ஆக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்