HIRE சட்டம் (சர்வதேச வேலைவாய்ப்பு இடமாற்றத்தை நிறுத்துதல் சட்டம்) 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அமெரிக்கக் குடியரசுக் கட்சி செனட்டர் பெர்னி மோரேனோவால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மசோதா மற்ற நாடுகளுக்கு வேலைவாய்ப்புகளை ஒப்பந்த சேவை அமர்த்தம் / புறத்திறனீட்டம் செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு 25% வரி விதிக்க முன்மொழிகிறது.
முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம் தகவல் தொழில்நுட்ப (IT) புறத்திறனீட்டம் உள்ளிட்ட சேவைத் துறையை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்திய IT நிறுவனங்கள் தங்கள் ஏற்றுமதி வருவாயில் தோராயமாக 62% அமெரிக்காவிலிருந்து பெறுகின்றன.
வன்பொருள் உட்பட இந்திய IT துறையின் மொத்த ஏற்றுமதி வருவாய் 224 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2023–24 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் அமெரிக்கா 17.7% பங்கைக் கொண்டிருந்தது.
2024 ஆம் நிதியாண்டில் இந்தியா அமெரிக்காவுடன் 45.7 பில்லியன் டாலர் வர்த்தக உபரியைக் கொண்டிருந்தது என்ற நிலையில் இதில் 38 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகள் வர்த்தகமும் அடங்கும்.
இந்திய IT துறை ஆசியா, ஆஸ்திரேலியா, நோர்டிக் நாடுகள், ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்துகிறது.