TNPSC Thervupettagam

அமெரிக்காவின் சரக்குப் பரிமாற்ற அறிக்கை

August 18 , 2026 13 hrs 0 min 33 0
  • "நிழல் சரக்குப் பரிமாற்ற வலைப்பின்னல்" அறிக்கையில் அமெரிக்கா இந்தியாவைக் குறிப்பிட்டுள்ளது.
  • சரக்குப் பரிமாற்றம் என்பது இறுதி இலக்கை அடைவதற்கு முன்பு ஒரு இடைநிலை நாடு வழியாக பொருட்கள் அனுப்பப்படுவதைக் குறிக்கிறது.
  • சுங்க வரிகளை (இறக்குமதி மீதான வரிகள்) தவிர்ப்பதற்காக சில சீனப் பொருட்கள் மூன்றாம் நாடுகள் வழியாக அமெரிக்க சந்தைக்குள் நுழைந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
  • அமெரிக்காவின் சரக்குப் பரிமாற்ற அபாயக் கட்டமைப்பில் இந்தியா 'அடுக்கு 1 – பன்முகப் படுத்தப்பட்ட அளவிலான முன்னணியினர்' பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.
  • சீனாவுடன் தொடர்புடைய சில தயாரிப்புகளுக்கான சாத்தியமான பாதையாக புனே-குஜராத்-சென்னை தொழில் வழித்தடத்தை இந்த அறிக்கை அடையாளம் கண்டுள்ளது.
  • சந்தேகத்திற்குரிய வர்த்தகச் சரக்குப் போக்குவரத்தைக் கண்டறிந்து கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளைப் பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்