TNPSC Thervupettagam

அமெரிக்காவின் தேச பக்த கடவுச்சீட்டு 2026

July 3 , 2026 4 days 59 0
  • அமெரிக்க சுதந்திரத்தின் 250 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அமெரிக்கா (U.S.) வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான "தேசபக்த கடவுச்சீட்டை" (Patriot Passport) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த கடவுச்சீட்டானது 2026 ஆம் ஆண்டு ஜூலை 6 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க கடவுச்சீட்டு முகமைகள் மூலம் குறைந்த எண்ணிக்கையில் கிடைக்கும்.
  • இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் படம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் அமெரிக்க கடவுச்சீட்டில் இடம் பெறும் முதல் பதவியிலிருக்கும் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
  • சுதந்திரப் பிரகடனம் கையெழுத்திடப்பட்ட (1776) ஓவியம் மற்றும் "யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா 250" என்ற வார்த்தைகளும் இதன் வடிவமைப்பில் அடங்கும்.
  • அமெரிக்காவின் ஒரு டாலர் நோட்டிலும் அதிபர் டிரம்பின் கையொப்பம் விரைவில் இடம்பெறும் என்று அமெரிக்க கருவூலத் துறை அறிவித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்