TNPSC Thervupettagam

அமெரிக்காவின் மருந்து மீதான வரிகள்

October 1 , 2025 31 days 68 0
  • இறக்குமதி செய்யப்பட்ட "நிறுவனப் பெயரின் முத்திரையிடப்பட்ட மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துத் தயாரிப்புகளுக்கு" 100% வரி விதிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் அறிவித்தார்.
  • இந்தியா, பெல்ஜியம், இத்தாலி மற்றும் சீனா ஆகியவை பெரும்பாலும் பொது மருந்துப் பிரிவுகளில் அமெரிக்காவிற்கு மருந்துகளை ஏற்றுமதி செய்கின்றன.
  • உலகின் மருந்தகம் என்று அழைக்கப்படும் இந்தியா, 5.71% என்ற உலகளாவியச் சந்தைப் பங்கைக் கொண்ட உலகின் மிகப்பெரிய மருந்து ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகும்.
  • 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள (FY25) ஏற்றுமதியில் சுமார் 35% பங்கினைக் கொண்டு இந்தியாவின் மிகப்பெரிய மருந்துச் சந்தையாக அமெரிக்கா உள்ளது.
  • அமெரிக்காவிற்கு வெளியே வேறொரு நாட்டில் தொழிற்சாலைகளைக் கொண்ட அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக (USFDA) அமைப்பின் விதிகளுக்கு இணக்கமான நிறுவனங்களும் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் அமைந்துள்ளன.
  • மருந்து உற்பத்தியில் இந்தியா உலகளவில் 3வது இடத்திலும், மதிப்பு ரீதியாக 11வது இடத்திலும் உள்ளது என்பதோடு மேலும் உலகளாவியத் தடுப்பூசிகளில் இந்தியா 60% பங்களிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்