அமெரிக்கா 2028 ஆம் ஆண்டிற்குள் விண்வெளியிலும், 2030 ஆம் ஆண்டிற்குள் நிலவிலும் அணு உலைகளை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவின் விண்வெளித் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்காக வெளியிடப் பட்ட "அமெரிக்க விண்வெளி அணுசக்திக்கான தேசிய முன்னெடுப்பு" என்பதன் கீழ் இந்தத் திட்டம் உள்ளது.
இந்த அணு உலை 20 கிலோவாட் (kW) மின்சாரத்தை உற்பத்தி செய்யும், இது சுற்றுப் பாதையில் 3 ஆண்டுகளுக்கும், நிலவு திட்டங்களுக்காக நிலவில் 5 ஆண்டுகளுக்கும் செயல்படும்.
அமெரிக்க எரிசக்தித் துறை இதன் மேம்பாடு, சோதனை, போக்குவரத்து மற்றும் ஏவுதல் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு ஆதரவளிக்கும்.
இந்தத் திட்டம் எதிர்கால செவ்வாய் கிரகப் பயணங்களுக்கான அணுசக்தி உந்துதலுக்கும் ஆதரவளிப்பதோடுஅமெரிக்க-சீன விண்வெளிப் போட்டியையும் பிரதிபலிக்கிறது.