அமெரிக்காவிலிருந்து கூகுள் பே மூலமாக இந்தியா மற்றும் சிங்கப்பூர்
May 16 , 2021 1554 days 671 0
ஆல்பாபெட் (Alphabet Inc’s) நிறுவனத்தின் ஒரு பிரிவான கூகுள், தனது அமெரிக்கப் பண வழங்கீட்டுச் செயலியின் உபயோகிப்பாளர்களுக்காக ஒரு சர்வதேச பணப்பரிமாற்ற கூட்டாண்மையைத் தொடங்கியுள்ளது.
இதற்காக பண வரவு தொடர்பான வைஸ் மற்றும் வெஸ்டர்ன் யூனியன் கோ ஆகிய நிறுவனங்களுடன் கூட்டாண்மை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலுள்ள கூகுள் பே உபயோகிப்பாளர்கள் இனி இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள கூகுள்பே உபயோகிப்பாளர்களுக்குப் பணப் பரிமாற்றம் செய்ய இயலும்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் வைஸ் நிறுவனம் மூலமாக 80 நாடுகளுக்கும் வெஸ்டர்ன் யூனியன் மூலமாக 200 நாடுகளுக்கும் இந்தத் திட்டமானது விரிவுபடுத்தப்படும்.