TNPSC Thervupettagam

அமெரிக்காவில் பிறப்புவழி குடியுரிமை

July 4 , 2026 3 days 63 0
  • அமெரிக்காவில் ஆவணமற்ற அல்லது தற்காலிகமாகப் குடியேறியவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கான குடியுரிமையைக் கட்டுப்படுத்தும் நிர்வாக உத்தரவை நிராகரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், பிறப்புரிமை குடியுரிமையை உறுதி செய்துள்ளது.
  • அமெரிக்காவில் பிறந்து அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து நபர்களுக்கும் குடியுரிமை வழங்கும் 14-வது திருத்தத்தை நீதிமன்றம் ஆதாரமாகக் கொண்டது.
  • வெளிநாட்டவர்களுக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கான குடியுரிமையை அங்கீகரித்த 1898 ஆம் ஆண்டு வோங் கிம் ஆர்க் வழக்கின் முன் தீர்ப்பை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
  • அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட அந்த நிர்வாக உத்தரவு, குடியேற்றக் கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாகும்; இது கீழ் நீதிமன்றங்களால் முடக்கப்பட்டது.
  • குடிமக்கள் அல்லாதவர்களின் குழந்தைகளை தானியங்கிக் குடியுரிமையிலிருந்து விலக்க அந்த உத்தரவு முற்பட்டதுடன் ஆண்டுதோறும் 2,50,000-க்கும் மேற்பட்ட பிறப்புகளைப் பாதிக்கும் வகையிலிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்