அமேசான் இந்தியா நிறுவனம் கர்நாடகாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
February 11 , 2022 1533 days 621 0
அமேசான் இந்தியா நிறுவனமானது, பெண் தொழில்முனைவோரின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் கர்நாடக மாநில கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டுச் சங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.
அமேசான் இந்தியா நிறுவனமானது தனது தளத்தில் ‘சஞ்சீவினி-கர்நாடக மாநில கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டுச் சங்கத்தினை’ அறிமுகப்படுத்தி, ‘சஹேலி’ திட்டத்தின் பயன்களை விரிவுபடுத்தும்.
சஹேலி திட்டம், பெண் தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கங்களை வழங்குகிறது.