இளைஞர்கள் விவகாரங்களில் ஒத்துழைப்பு நல்குவதற்காக இந்தியா மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவற்றிற்கிடையே 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா மற்றும் உஸ்பெக்கிஸ்தானுக்கு இடையே அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் கூட்டிணைந்து பணியாற்றுவதற்கான ஒரு ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக இந்தியாவின் அடல் புத்தாக்க திட்டம் மற்றும் ரஷ்யாவின் நிதி “செயல்திறன் மற்றும் வெற்றி” (Fund “Talent and Success”) ஆகியவற்றிற்கிடையேயான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவைக் குழுவானது ஒப்புதல் அளித்துள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்ட அளவீட்டியல் மீதான இந்தியா மற்றும் மொரீஷியஸ் ஆகியவற்றிற்கிடையேயான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.