மத்திய அமைச்சரவையின் மறுசீரமைப்பு மற்றும் விரிவாக்கம் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலினச் சாதியினர் போன்ற சமுதாயத்தினர் ஒரு வரலாற்றுச் சாதனை அளவில் சேர்க்கப் பட்டுள்ளதைக் கண்டுள்ளது.
43 அமைச்சர்களின் பதவியேற்பு பிரமாணமானது பிரதமர் மோடி அவர்கள் மேற்பார்வையில் நடந்தேறியது.
முன்பு 12 அமைச்சர்கள் (7 அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் 5 இணை அமைச்சர்கள்) ராஜினாமா செய்தனர்.
தற்போது இந்திய அரசில் பட்டியலினச் சாதியினர் சமுதாயத்தைச் சேர்ந்த 12 அமைச்சர்களும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த 27 அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் வகுப்பினைச் சேர்ந்த 8 அமைச்சர்களும் ஒரு இஸ்லாமியர், ஒரு கிறித்துவர், ஒரு சீக்கியர் மற்றும் இரண்டு புத்த மதத்தவர் உள்ளிட்ட சிறுபான்மையினச் சமூகத்தைச் சேர்ந்த 5 அமைச்சர்களும் இடம் பெற்று உள்ளனர்.
அமைச்சரவையில் 11 பெண் அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர், அவர்களுள் 2 உறுப்பினர்கள் காபினெட் அமைச்சர்களாகவும் மற்றும் இதர உறுப்பினர்கள் இணை அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர்.