TNPSC Thervupettagam

அமைச்சரவைக் குழுக்கள்

June 7 , 2019 2238 days 782 0
  • இந்திய அரசானது ஆறு அமைச்சரவைக் குழுக்களை மீள் உருவாக்கம் செய்துள்ளது.
  • இதனுடன் இரண்டு புதியக் குழுக்களையும் உருவாக்கியுள்ளது.
  • தற்போது உருவாக்கப்பட்ட குழுக்களாவன
    • நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு
    • வசிப்பிட விவகார அமைச்சரவைக் குழு
    • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு
    • பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு
    • பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழு
    • முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவைக் குழு
    • வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான அமைச்சரவைக் குழு
  • இவற்றில் இரண்டு குழுக்கள் தவிர மற்ற அனைத்திற்கும் பிரதமர் தலைமை வகிப்பார்.
  • பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் வசிப்பிட விவகாரங்களுக்கான குழுக்களுக்கு உள்துறை அமைச்சரான அமித்ஷா தலைமை வகிப்பார்.
  • முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவைக் குழு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான அமைச்சரவைக் குழு ஆகிய இரண்டும் புதிதாக உருவாக்கப்பட்ட குழுக்களாகும்.
  • இவையல்லாமல் நிலைக் குழுக்களைப் பிரதமர் உருவாக்கி அதற்கான குறிப்பிட்ட பணிகளையும் அவர் அதற்கு ஒதுக்குவார்.
  • மேலும் இவர் இந்தக் குழுக்களின் எண்ணிக்கையைக் கூட்டவோ குறைக்கவோ முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்