TNPSC Thervupettagam

அமைச்சரவையின் புதிய முடிவுகள் 2026

November 18 , 2026 2 days 76 0
  • புதுதில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில் ₹3,230 கோடி மதிப்பீட்டில் யுகே யுகீன் பாரத் தேசிய அருங்காட்சியகத்தை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியாவின் நாகரிகம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றைப் பறைசாற்றும் கலாச்சார நிறுவனமாக இவ்வரலாற்றுக் கட்டிடங்களை மாற்றுவதன் மூலம் மத்திய கலாச்சார அமைச்சகத்தால் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்படும்.
  • 2026–27 ஆம் ஆண்டு ராபி பருவத்திற்கு (2026 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை) பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசிக் (P&K) உரங்களுக்கு ₹62,370 கோடி ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத்திற்கும் (NBS) அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது; டை-அம்மோனியம் பாஸ்பேட் (DAP) விலை 50 கிலோ மூட்டை ஒன்றுக்கு ₹1,350 ஆகவே நீடிக்கும்.
  • பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) மற்றும் ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தின் கீழான கடன் உத்தரவாத ஆதரவு முறையே ₹5,000 கோடி மற்றும் ₹4,111 கோடி ஒதுக்கீடுகளுடன் 2031 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • நீட்டிக்கப்பட்ட ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் ஐந்தாண்டுகளில் பெண்கள், பட்டியலிடப்பட்ட சாதி (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியின (ST) சமூகங்களைச் சேர்ந்த கூடுதலாக 2.5 லட்சம் தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்