TNPSC Thervupettagam

அமைச்சரவையின் முக்கிய முடிவுகள்

July 11 , 2019 2133 days 706 0
சீட்டு மோசடி
  • முறைப்படுத்தப்படாத வைப்புகள் திட்ட மசோதா 2019-க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • நாட்டில் சட்டவிரோத வைப்பு நடவடிக்கை அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்த மசோதா உதவும்.
மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் விவகாரங்கள்
  • மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் விவகாரங்கள் திருத்த மசோதா 2019 -க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த மசோதாவானது 1956  ஆம் ஆண்டின் மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் விவகாரங்கள் சட்டத்தை திருத்தம் செய்ய முயல்கிறது.
  • இந்த மசோதாவானது தீர்ப்பளிப்பதற்கான காலக்கெடுவை தீவிரமாக்குவதற்காக வெவ்வேறு அமர்வுகளைக் கொண்ட ஒரே தீர்ப்பாயத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கிராமப்புற சாலைகள்
  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனாவின் (BMGSY) மூன்றாவது கட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதன் கீழ் கிராமப்புறங்களில் 1.25 லட்சம் கி.மீ. சாலைகளில் மேம்படுத்தப்படும்.
ரயில்வே பாதுகாப்புப் படை
  • மத்திய அமைச்சரவையானது ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குரூப் – A அந்தஸ்தை வழங்கியுள்ளது.
  • இந்த மாதத் தொடக்கத்தில் மத்திய சேமக் காவல்படை, எல்லை பாதுகாப்புப் படை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத் எல்லைக் காவல்படை மற்றும் சாஸ்திர சீமா பால் ஆகியவற்றிற்கும் இதே சலுகை வழங்கப்பட்டன.
சிறார் வன்கொடுமை மரண தண்டனை
  • குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்துப் பாதுகாக்கும் சட்டம் 2012-ஐ திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த மசோதாவானது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை உட்பட கடுமையான தண்டணையை வழங்குகிறது.
திருநங்கைகளுக்கு ஆதரவு
  • திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2019-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • திருநங்கைகளுக்கு சமூக, பொருளாதார மற்றும் கல்வி அதிகாரங்களை அளிக்க இந்த மசோதா முயல்கிறது.
  • இந்த மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்புதலானது தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் 100 நாட்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளது.
தொழில் ரீதியான பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிலைகள் மசோதா - 2019
  • தொழில் ரீதியான பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணிநிலைகள் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த மசோதாவானது தொழில் ரீதியான பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணிநிலைகள் மீதான 13 தொழிலாளர் சட்டங்களை ஒரே சட்டமாக இணைக்க முயல்கிறது.
  • இது 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்