அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினம் – 10 நவம்பர்
November 12 , 2021 1424 days 497 0
சமூகத்தில் அறிவியல் வகிக்கும் முக்கியப் பங்கையும், வளர்ந்து வரும் விஞ்ஞானப் பிரச்சனைகள் குறித்த விவாதங்களில் பொதுமக்களை ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்க வேண்டி இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு என்பது அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினத்தின் 20வது பதிப்பைக் குறிக்கிறது.
இந்த ஆண்டின் அனுசரிப்பானது "காலநிலைக்குத் தயாராக உள்ள சமூகங்களை உருவாக்குதல்" (Building Climate-Ready Communities) என்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.
2001 ஆம் ஆண்டில் உலக அறிவியல் தினம் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (யுனெஸ்கோ) அறிவிக்கப்பட்டது.
இது முதல் முறையாக 2002 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.