TNPSC Thervupettagam
October 11 , 2026 14 days 243 0
  • தென்னாப்பிரிக்க சட்ட நிபுணரான நவநீதம் “நவி” பிள்ளைக்கு அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக 2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • நவி பிள்ளை நிறவெறி இருந்த காலத்தில் தென்னாப்பிரிக்காவின் டர்பனில் இந்தியத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்.
  • இவர் தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்றம், ருவாண்டாவிற்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICTR) மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ஆகியவற்றில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.
  • இவர் 2008 முதல் 2014 ஆம் ஆண்டு வரை மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் (UN) உயர் ஆணையராகப் பணியாற்றினார்.
  • ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பகுதி குறித்த ஐ.நா சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்தின் தலைவராக அவர் பணியாற்றினார்.
  • ரோஹிங்கியாக்களுக்கு எதிராக மியான்மர் அரசு இனப்படுகொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) அவர் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்