அமைதிக்கான பன்னாட்டு முறைமை மற்றும் அரசியல் செயலாண்மை திறனுக்கான சர்வதேச தினம் – ஏப்ரல் 24
April 28 , 2021 1569 days 529 0
இத்தினம் ஐக்கிய நாடுகளால் முதன்முறையாக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று அனுசரிக்கப் பட்டது.
ஐ.நா.வின் மூன்று தூண்களை மேம்படுத்தவும் அதற்கு ஆதரவளிக்கவும் பன்னாட்டு முறைமை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றின் மதிப்புகளைப் பாதுகாப்பது அடிப்படையான ஒன்று என கருதி ஐ.நா. அமைப்பு இத்தினத்தினை அறிவித்தது.
அமைதி & பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் வளர்ச்சி ஆகியவை ஐ.நா.வின் மூன்று தூண்களாகும்.
இது அமைதியான முறையில் நாடுகளுக்கிடையே நிலவும் தகராறுகளை தீர்ப்பதற்கான ஐ.நாவின் சாசனம் மற்றும் கொள்கைகளை மீண்டும் உறுதி செய்யும் தினமாகும்.