அமைதியுடன் ஒற்றுமையாக வாழ்வதற்கான சர்வதேச தினம் - மே 16
May 19 , 2022 1234 days 471 0
2017 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையானது, உள்ளடக்கம், ஒருமைப்பாடு மற்றும் அமைதி ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக வேண்டி மே 16 ஆம் தேதியை அமைதியுடன் ஒற்றுமையாக வாழ்வதற்கான ஒரு சர்வதேச தினமாக அனுசரிக்க உள்ளதாக அறிவித்தது.
இந்தத் தினம் பல்வகைத் தன்மை மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையைக் குறிக்கும் தினமாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையானது, 2001 முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளை "உலகக் குழந்தைகளுக்கான அமைதி மற்றும் அகிம்சை கலாச்சாரத்திற்கான சர்வதேசப் பத்தாண்டு" என்று அறிவித்தது.