அம்பேத்கர் சமூகப் புத்தாக்கம் மற்றும் தொடக்க நிறுவனங்களைக் காக்கும் திட்டம்
October 5 , 2020 1780 days 664 0
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது அம்பேத்கர் சமூகப் புத்தாக்கம் மற்றும் தொடக்க நிறுவனங்களைக் காக்கும் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
இது பட்டியல் சாதியினருக்கான துணிகர மூலதன நிதியை அமல்படுத்தும் (Venture Capital Fund for Scheduled Castes).
குறிக்கோள்கள்:
பட்டியல் இனத்தைச் சேர்ந்த தொழில்முனையும் இளைஞர்களை அதிலும் மாற்றுத் திறனாளிகளை அதிக முன்னுரிமையுடன் ஊக்குவித்தல்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப வணிக தொடக்க நிறுவனங்களுடன் (தொடக்க நிறுவனங்களைக் காப்பது) இணைந்து ஓர் ஒருங்கிணைந்த பணி மூலம் 2024 ஆம் ஆண்டு வரை (1,000) புதுமையான யோசனைகளை ஆதரித்தல்.
இதன் கீழ், 1,000 பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அடுத்த 4 ஆண்டுகளில் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்ப வணிக தொடக்க நிறுவனங்கள் (Technology Business Incubators) மூலம் புத்தாக்க யோசனைகளுடன் அடையாளம் காணப் படுவார்கள்.