அம்பேத்கர் ஜெயந்தி - ஏப்ரல் 14
April 16 , 2022
1207 days
435
- இந்த தினமானது பீம் ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது.
- பாபா சாகேப் டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த தினமானது கொண்டாடப்படுகிறது.
- இந்த தினம் 2015 ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அதிகாரப்பூர்வப் பொது விடுமுறை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
- 2022 ஆம் ஆண்டில் பாபா சாகேப் அவர்களின் 131வது பிறந்தநாள் கொண்டாடப் படுகிறது.
- டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பின் தந்தை (தலைமை வடிவமைப்பாளர்) என்று அழைக்கப் படுகிறார்.
- சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் முதல் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றினார்.
- டாக்டர் பீம் அவர்களுக்கு 1990 ஆம் ஆண்டில் நாட்டின் உயரியக் குடிமை விருதான பாரத ரத்னா (மரணத்திற்குப் பிறகு) வழங்கப்பட்டது.

Post Views:
435