அம்மா வோடித் திட்டம் நீட்டிப்பு – ஆந்திரப் பிரதேசம்
June 28 , 2019 2151 days 711 0
அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றிலும் உறைவிடப் பள்ளிகள் மற்றும் விடுதிகள் ஆகியவற்றிலும் பயிலும் இடைநிலை மாணவர்களுக்கும் அம்மா வோடித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அம்மா வோடித் திட்டத்தின் கீழ், தம்முடைய குழந்தைகளைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பும் ஒவ்வொரு தாய்மார்களுக்கும் வருடாந்திர நிதியுதவியாக ரூ.15,000 அளிக்கப்படவிருக்கின்றது.