அம்மோனியா உற்பத்தி செயல்முறைக்கான புதிய மின்பகுபொருள்
January 15 , 2023 947 days 430 0
நுண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் உள்ள அறிவியலாளர்கள் சோடியம் டெட்ராபுளோரோபோரேட் (NaBF4) என்ற புதிய மின்பகுபொருளை உருவாக்கியுள்ளனர்.
இது ஊடகத்தில் N2 கடத்தியாகச் செயல்படுவதோடு, இது அந்தச் சூழலில் அதிகளவில் அம்மோனியாவினை உருவாக்குவதற்காக MnN4 உடன் "இணை-வினையூக்கியாக" செயல்படுகிறது.
பசுமை ஆற்றல் அல்லது ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் தொழில்சாலைகளுக்கு அம்மோனியா உற்பத்தி முறை ஒரு முக்கியமான செயல்முறையாகும்.
நைட்ரஜனின் மின்வேதியியல் பண்பு குறைப்பு என்பது, நைட்ரஜன் குறைப்பு எதிர் வினை (NRR) என்றும் அழைக்கப்படுகிறது.
நீரில் நைட்ரஜன் குறைவான கரைதிறன் கொண்டதாக இருப்பதால் இந்த அமைப்பில் இது ஒரு பெரிய தடையாக உள்ளதோடு, இது நைட்ரஜன் குறைப்பு எதிர்வினையின் செயல்திறனைக் கட்டுப்படுத்துகிறது.