மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 2021 ஆம் ஆண்டு அம்ரித் மகோத்சவ் ஸ்ரீசக்தி என்ற சவாலினைத் தொடங்கி வைத்தார்.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பு ஆகியவற்றை எளிதாக்கும் வகையில், பெண் தொழில்முனைவோர்களால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத் தீர்வுகளை ஊக்குவிப்பதற்காக இது தொடங்கப்பட்டுள்ளது.
மகளிர்களுக்கு அவர்களது முழுத் திறனையும் அடைவதற்கான அதிகாரத்தினை வழங்குவதே இதன் நோக்கமாகும்.