அடல் புத்துயிர்ப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான திட்டத்தின் (அம்ருத்) மற்றும் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ், நகர்ப்புறங்களில் குழாய் நீர் இணைப்பு வசதி 2011-ஆம் ஆண்டிலிருந்து 64% அதிகரித்துள்ளது.
இது 49%-லிருந்து 2026-ஆம் ஆண்டில் சுமார் 77% ஆக உயர்ந்துள்ளது.
நகரங்கள் முழுவதும் மொத்தம் 228 லட்சம் வீட்டிற்கு குழாய் நீர் இணைப்புகளும், 20 லட்சம் கழிவுநீர் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் 7,480 ஏக்கர் நீர்ப்பரப்புகளைப் புத்துயிர் பெறச் செய்துள்ளதுடன், 2,704 ஏக்கர் பசுமைப் பகுதிகளையும் உருவாக்கியுள்ளது.
அம்ருத் மித்ரா, நீர் மேலாண்மை, தரக் கண்காணிப்பு, கட்டண வசூல் மற்றும் செடிகள் பராமரிப்பு ஆகியவற்றுக்கு ஆதரவளிப்பதற்காக 28,000க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை ஈடுபடுத்தியுள்ளது.