அம்லேஷ் குமார் மற்றும் பீகார் மாநில அரசு இடையிலான வழக்கு
June 16 , 2025 19 days 68 0
உச்ச நீதிமன்றமானது ஒரு குற்றம் சாட்டப்பட்டவரை போதைப் பொருள் பகுப்பாய்வு வகை சோதனைக்கு என்று அவரை உட்படுத்துவதற்கு அவருக்கு எவ்விதமான மறுக்க முடியாத உரிமையும் இல்லை என்று கூறியுள்ளது.
ஆனால் நீதிமன்றம் ஆனது, "குற்றம் சாட்டப்பட்டவர் பொருத்தமானச் சூழலில் தானாக முன் வந்து அப்போதைப் பொருள் பகுப்பாய்வு சோதனைக்கு உட்பட உரிமை உண்டு" என்று கூறியது.
காணாமல் போன பெண் சம்பந்தப்பட்ட வரதட்சணை கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும், போதைப் பொருள் பகுப்பாய்வு வகை சோதனைகளை நடத்த வேண்டி காவல்துறைக்கு ஒரு அனுமதியினை அளித்த பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை இந்தத் தீர்ப்பு ரத்து செய்தது.
2010 ஆம் ஆண்டில், செல்வி மற்றும் கர்நாடகா மாநில அரசு இடையிலான வழக்கில் உச்ச நீதிமன்றம் போதைப்பொருள் பகுப்பாய்வுச் சோதனை போன்ற நுட்பங்களுக்கு ஒரு நபரை வலுக்கட்டாயமாக உட்படுத்துவது, அரசியலமைப்பின் 20(3) மற்றும் 21 ஆகிய சரத்துகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தனிப்பட்டச் சுதந்திரத்தை மீறுவதாகக் கூறியுள்ளது.
போதைப் பொருள் பகுப்பாய்வு என்பது சில மயக்க மருந்துகள் (பார்பிட்யூரேட்டுகள்) அல்லது மிகப் பெரும்பாலும் சோடியம் பென்டோத்தல் போன்ற பிற இரசாயனங்களை உபயோகிக்கும் முறையாகும்.
நீதிமன்றத்தால் நேரடியாக ஒரு தன்னார்வ அடிப்படையிலான போதைப் பொருள் பகுப்பாய்வு அறிக்கைகளை ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியாது.