TNPSC Thervupettagam

அயல் ஊடுருவல் இனம் - இராட்சத ஆப்பிரிக்க நத்தை

September 13 , 2025 10 days 60 0
  • சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் இராட்சத ஆப்பிரிக்க நத்தை (லிசாசடினா ஃபுலிகா) கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த இனமானது உலகின் மிக மோசமான ஆக்கிரமிப்பு இனங்களில் ஒன்றாகவும், தீங்கு விளைவிக்கும் ஒட்டுண்ணிகளின் அறியப்பட்ட ஓம்புயிரியாகவும் கருதப் படுகிறது.
  • கள ஆய்வுகள் பரங்கிமலை/செயிண்ட் தாமஸ் மவுண்ட், திரிசூலம் மற்றும் பெருங்களத்தூர் மலைகளில் அது காணப்படுவதாக உறுதிப்படுத்தின.
  • ஆஞ்சியோஸ்ட்ராங்கைலஸ் கான்டோனென்சிஸ் மற்றும் A. கோஸ்டாரிசென்சிஸ் போன்ற ஒட்டுண்ணி நூற்புழுக்களுக்கு இந்த நத்தை ஓர் ஓம்புயிரியாக/காரணியாக செயல்படுகிறது.
  • இந்த ஒட்டுண்ணிகள் மனிதர்களில் ஈசினோபிலிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் மற்றும் வயிற்று ஆஞ்சியோஸ்ட்ராங்கைலியாசிஸ் பாதிப்பினை ஏற்படுத்தும்.
  • பாதிக்கப்பட்ட நத்தைகள் அல்லது நத்தை எச்சங்கள் ஊடுருவுவதன் மூலம் மனித தொற்று ஏற்படலாம்.
  • இந்த நத்தை பல்வேறு வாழ்விடங்களில் உயிர்வாழும் திறன் கொண்டது மற்றும் 500க்கும் மேற்பட்ட தாவர இனங்களை உட்கொள்கிறது.
  • ஒரு தீவிர விவசாயத் தாக்குதல் இனம் ஆன இது 100 மோசமான அயல் ஊடுருவல் இனங்களின் பட்டியலில் தொடர்ந்து இடம்பெறுகிறது.
  • 1847 ஆம் ஆண்டு கொல்கத்தா தோட்டத்தில் ஓர் இணை நத்தை விடுவிக்கப்பட்ட போது இந்த இனம் முதன்முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது.
  • இந்த நத்தைகள் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றி வணிகக் கப்பல்கள் வழியாக இந்தியாவிற்குப் பரவின.
  • 1984 ஆம் ஆண்டில், சென்னை, சிதம்பரம், கோயம்புத்தூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் அவற்றின் இருப்பு பதிவு செய்யப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்