2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒவ்வொரு வனப் பிரிவிலிருந்தும் சென்னா ஸ்பெக்டபிலிஸை அகற்றுவதற்காக தமிழ்நாடு அரசானது நாட்டின் மிகப்பெரிய ஒழிப்பு முயற்சிகளில் ஒன்றை மேற்கொண்டு வருகிறது.
சென்னா ஸ்பெக்டபிலிஸ் என்பது ஃபேபேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஓர் ஊடுருவல் சார்ந்த, வேகமாக வளரும் மஞ்சள் நிற பூக்கும் மரமாகும்.
இது தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது என்பதோடு மேலும் இது நீலகிரி, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சில பகுதிகளில் அதிகளவில் பரவிக் காணப்படுகிறது.
வறண்டது முதல் ஈரப்பதமான இலையுதிர் காடுகளில் செழித்து வளர்கின்ற இது ஏராளமான விதைகள் மூலம் விரைவாகப் பரவுகிறது என்பதோடுஇது அடர்த்தியான ஒரு பயிர்ப் பரவலை உருவாக்குகிறது.
இது பல்லுயிரியலைக் குறைப்பதன் மூலமும், வன மீளுருவாக்கத்தைக் குறைப்பதன் மூலமும், தீ பரவும் அபாயத்தை அதிகரிப்பதன் மூலமும், வனவிலங்குகளுக்கான தீவனத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.