அயல்நாட்டில் அமைந்த நாடு கடந்த திபெத்தியப் பாராளுமன்றம்
December 28 , 2020 1782 days 665 0
அமெரிக்க காங்கிரஸ் ஆனது திபெத்தியக் கொள்கை மற்றும் ஆதரவுச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
சீனாவின் எந்தவொரு குறுக்கீடும் இல்லாமல் தலாய் லாமாவின் அடுத்த வாரிசைத் தேர்ந்தெடுப்பதற்கான திபெத்திய பௌத்தர்களின் உரிமைகளை அது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
நாடு கடந்த திபெத்தியப் பாராளுமன்றத்தின் தலைமையகம் இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள தர்மசாலாவில் உள்ளது.
தற்போதைய மற்றும் 14வது தலாய் லாமா 1959 ஆம் ஆண்டு திபெத்திலிருந்து தப்பி வந்த காலம் முதல் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்.