TNPSC Thervupettagam

அயல்நாட்டு ஆக்கிரமிப்பு உயிரினங்களுக்கான நிபுணர் குழு

March 25 , 2026 2 days 54 0
  • தேசியப் பல்லுயிர் ஆணையம் (NBA), அயல்நாட்டு ஆக்கிரமிப்பு உயிரினங்கள் குறித்த ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
  • இந்தியாவில் அயல்நாட்டு ஆக்கிரமிப்பு உயிரினங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்த குழு உருவாக்கப் பட்டது.
  • தேசிய அளவிலான அயல்நாட்டு உயிரினங்களின் பட்டியலைத் தயாரிக்கும் இது மாநிலங்கள் வாரியாக அதிக ஆபத்துள்ள உயிரினங்களையும் கண்டறியும்.
  • தடுப்பு, கட்டுப்பாடு, ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு ஆகியவற்றிற்கான உத்திகளை இக்குழு பரிந்துரைக்கும்.
  • இது பல்லுயிர்ப் பாதுகாப்பை ஆதரிப்பதுடன், தேசிய மற்றும் உலகளாவிய சுற்றுச் சூழல் உறுதிப்பாடுகளை வலுப்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்