அயல்நாட்டு மாணவர்களுக்காக இந்தியாவில் பயில்வோம் திட்டம்
July 17 , 2019 2126 days 657 0
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது, “இந்தியாவில் பயில்வோம் திட்டத்தில்” யோகாப் பயிற்சியும் சேர்க்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் தெரிவித்துள்ளது.
இது இந்தியாவில் நம்பத் தகுந்த யோகாப் பயிற்சியைப் பெறுவதற்கு வெளிநாட்டு மாணவர்களையும் வெளிநாட்டிலிருந்து யோகாப் பயிற்சி பெற விரும்புபவர்களையும் அனுமதிக்கின்றது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education - CBSE), தன் கீழ் உள்ள பள்ளிகளில் சுகாதார மற்றும் உடற்பயிற்சிக் கல்வியின் ஒரு பகுதியாக யோகாப் பயிற்சியை ஏற்கெனவே சேர்த்துள்ளது.