அரசி ஆணை பெற்ற வழக்குரைஞர்க்கான இந்தியாவின் கோரிக்கை
September 23 , 2020 1799 days 756 0
பாகிஸ்தான் நாட்டில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் குல்பூஷன் ஜாதவ் நியாயமான மற்றும் தடையற்ற விசாரணையை மேற்கொள்வதை உறுதி செய்வதற்காக வேண்டி அரசி ஆணை பெற்ற வழக்குரைஞர் அல்லது இந்திய வழக்குரைஞர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் ஒரு கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
அரசி ஆணை பெற்ற வழக்குரைஞர் என்பவர் உயராட்சித் தலைவரின் பரிந்துரையின் அடிப்படையில் ஐக்கிய இராஜ்ஜிய அரசிக்கு என்று நியமிக்கப்பட்ட ஒரு வழக்குரைஞர் ஆவார்.
அரசி ஆணை பெற்ற வழக்குரைஞர்கள் உலகம் முழுவதும் ஏறத்தாழ அனைத்து நீதிமன்றங்களிலும் அங்கீகரிக்கப் பட்டுள்ளனர்.
அரசி ஆணை பெற்ற வழக்குரைஞர் அனுபவத்தின் அடிப்படையில் அல்லாமல் தகுதியின் அடிப்படையில் சட்டம் சார் தொழில்முறையிலிருந்து நியமிக்கப் பட்டு உள்ளனர்.