அரசின் இணையச் சந்தை கொள்முதலில் இரண்டாவது மிக அதிக உயர்வு
June 24 , 2023 789 days 370 0
அரசின் இணையச் சந்தை (GeM) என்பது ஓர் இயங்கலை வழியான பொது கொள்முதல் தளமாகும்.
தமிழக மாநிலத்தில் அரசின் இணையச் சந்தை விற்பனையாளர் தளத்தினை மிகவும் மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில் துறைகள் சங்கத்துடன் (TANSTIA) இது ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
கடந்த நிதியாண்டில், 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுள் தமிழ்நாடு மாநிலத்தில் அரசின் இணையச் சந்தை கொள்முதலில் இரண்டாவது மிக அதிக உயர்வு பதிவாகியுள்ளது.
2021-22 ஆம் நிதியாண்டில் 220.89 கோடி ரூபாயாக இருந்த கொள்முதல் மதிப்பு ஆனது 2022-23 ஆம் நிதியாண்டில் 302.5% உயர்ந்து 889.19 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.