இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2020–21 தொடர் II தங்கப் பத்திரங்களின் (SGBs) முன்கூட்டிய மீட்பு விலையை 2026 ஆம் ஆண்டு நவம்பர் 19 முதல் அமலுக்கு வரும் வகையில் ஒரு கிராமுக்கு ₹13,345 ஆக நிர்ணயித்துள்ளது.
இந்தப் பத்திரங்கள் முதலில் 2020 ஆம் ஆண்டு மே 19 அன்று நேரடிச் சந்தா தாரர்களுக்கு ஒரு கிராமுக்கு ₹4,590 ஆகவும், இணையவழி சந்தாதாரர்களுக்கு ₹4,540 ஆகவும் வெளியிடப்பட்டன.
வட்டி வருமானம் நீங்கலாக, நேரடி சந்தாக்கள் மூலம் சுமார் 191% மற்றும் இணைய வழிச் சந்தாக்கள் மூலம் 194% லாபத்தை முதலீட்டாளர்கள் பெற்றுள்ளனர்.
SGB-கள் என்பவை தங்கத்தின் கிராம்களில் மதிப்பிடப்படும் அரசுப் பத்திரங்களாகும், மேலும் இவை அரையாண்டுக்கு ஒருமுறை செலுத்தப்படும் வகையில் ஆண்டுக்கு 2.5% வட்டி விகிதத்தை வழங்குகின்றன.
வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, வட்டி செலுத்தும் தேதியில் முன்கூட்டிய மீட்பு அனுமதிக்கப் படுகிறது.