அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா, 2026 - நீதித்துறை பன்முகத்தன்மை
February 22 , 2026 113 days 179 0
நீதித்துறை நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்குவதற்காக, நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பி. வில்சன், 2026 ஆம் ஆண்டு தனிநபர் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் பட்டியல் சாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), மத சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதை இந்த மசோதா முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
நியமனங்கள் அவர்களின் மக்கள்தொகை விகிதத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு கொலீஜியத்தின் பரிந்துரைகளை அறிவிக்க 90 நாள் கால அவகாசத்தை நிர்ணயிக்கவும் அது முன்மொழிகிறது.
நீதிக்கான அணுகலை மேம்படுத்துவதற்காக புது தில்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் பிராந்திய அமர்வுகளையும் இந்த மசோதா முன்மொழிகிறது.
தற்போது, இரண்டாவது நீதிபதிகள் வழக்கு (1993) மூலம் உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப் பட்ட கொலீஜியம் அமைப்பு மூலம் நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள்.