TNPSC Thervupettagam

அரசியலமைப்பு தினம் 2026 - நவம்பர் 26

November 27 , 2026 16 hrs 0 min 37 0
  • 1949 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு நிர்ணய சபையால் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதை நவம்பர் 26 குறிக்கிறது.
  • 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்து, இந்தியாவை ஒரு குடியரசாக மாற்றியது.
  • 2015 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியால் அரசியலமைப்பு தினமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு, டாக்டர் எல். எம். சிங்வி தலைமையிலான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தீர்மானத்தைத் தொடர்ந்து 1979 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 26 தேசியச் சட்ட தினமாக அனுசரிக்கப்பட்டது.
  • ஆரம்பகட்ட வரைவு 1948 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அரசியலமைப்பு ஆலோசகர் பி. என். ராவ் அவர்களால் தயாரிக்கப்பட்டது, மேலும் வரைவுக் குழுவிற்கு டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமை தாங்கினார்.
  • அரசியலமைப்பு நிர்ணய சபை 2,000-க்கும் மேற்பட்ட திருத்தங்களைப் பரிசீலித்தது; அரசியலமைப்பு ஆங்கிலம் மற்றும் இந்தியில் கையால் எழுதப்பட்டதுடன், நந்தலால் போஸின் கலைப்படைப்புகளையும் கொண்டிருந்தது.
  • 1976 ஆம் ஆண்டின் 42-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் முகவுரையில் சமதர்மம் (Socialist) மற்றும் மதச்சார்பற்ற (Secular) ஆகிய சொற்களைச் சேர்த்தது; அடிப்படைக் கடமைகள் பகுதி IVA-இல் சேர்க்கப்பட்டுள்ளன.a

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்