அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2019
December 26 , 2019 2019 days 590 0
இது 2019 ஆம் ஆண்டு ஜனவரி 9 அன்று மத்தியப் பழங்குடியின விவகாரங்கள் துறை இணை அமைச்சரான ரேணுகா சிங் சருதா என்பவரால் மாநிலங்களவையில் அறிமுகப் படுத்தப்பட்டது.
அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை, 1950 ஆனது பழங்குடியினர் மற்றும் பழங்குடிச் சமூகங்களைப் பட்டியலிடப்பட்ட பழங்குடியினராகக் கருதப்படும் என்று குறிப்பிடுகின்றது.
இந்த மசோதாவானது கர்நாடகாவில் உள்ள பட்டியலிடப்பட்ட பழங்குடியினரைக் குறிப்பிடும் ஆணையின் ஆறாம் பிரிவைத் திருத்துகின்றது.
இது பின்வருவனவற்றை மாற்றுவதன் மூலம் இந்த ஆணையைத் திருத்துகின்றது:
“நாயக்தா, நாயக்கா” ஆகியவற்றிற்குப் பதிலாக “நாயக்தா, நாயக்கா” (பரிவரா மற்றும் தலவரா உட்பட) என்பதனைச் சேர்த்தல் மற்றும்
“சித்தி” (உத்தர கன்னட மாவட்டத்தில்) என்பவற்றிற்குப் பதிலாக “சித்தி” (பெலகாவி, தார்வாட் மற்றும் உத்தர கன்னட மாவட்டங்களில்) என்பதனைச் சேர்த்தல்.