அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்டச் சாதிகள் மற்றும் பழங்குடியினர்) ஆணைகள் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2022
April 9 , 2022 1221 days 518 0
உத்தரப் பிரதேசத்தின் நான்கு மாவட்டங்களில் உள்ள கோண்ட் சமூகத்தை ஒரு பட்டியலினச் சாதியினர் என்ற பட்டியலில் வைப்பதற்காக இயற்றப்பட்ட 1950 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்டச்சாதிகள்) ஆணையை இது திருத்துகிறது.
இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள கோண்ட், துரியா, நாயக், ஓஜா, பதரி மற்றும் ராஜ்கோண்ட் சமூகங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க இது முயல்கிறது.
ஜார்க்கண்டில் உள்ள பட்டியலிடப்பட்டச் சாதிகள் பட்டியலில் இருந்து போக்தா (Bhogta) என்ற சமூகத்தைத் தவிர்க்கவும் இது திருத்தம் செய்கிறது.