அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் நேரடி ஒளிபரப்பு
September 27 , 2018 2518 days 962 0
இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அமர்வில் நடைபெறும் அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் நேரடி ஒளிபரப்பிற்கு உச்சநீதிமன்றம் (செப்டம்பர் 26) அனுமதியளித்துள்ளது.
நீதிமன்றத்தை நெரிசலற்றதாக மாற்றும் முயற்சியில் ‘திறந்தவெளி நீதிமன்றம்’ என்ற கருத்தை செயல்படுத்த வேண்டுமென இந்த அமர்வு கூறியுள்ளது.
நீதிமன்றத்தின் கூற்றுப்படி பொது மக்களுக்கு நீதிமன்றத்தின் உள்ளே நடைபெறுவனவற்றை தெரிந்து கொள்வதற்கான உரிமை உள்ளது.
இந்த முடிவானது மூத்த வழக்கறிஞரான இந்திரா ஜெய்சிங்க், சட்ட மாணவர் ஸ்னேஹில் திரிபாதி, பொறுப்புணர்வு மற்றும் ஒழுங்குமுறை சார்ந்த மாற்றத்திற்கான அரசு சாரா நிறுவன மையம் ஆகியவற்றின் மனுக்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.