அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது என்ற கோட்பாடு
May 27 , 2025 83 days 122 0
குடியுரிமை (திருத்தம்) சட்டத்தினை அரசியலமைப்புக்குட்பட்ட சட்டமாக அறிவிக்கக் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்தியாவின் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்திற்கு ஏற்கனவே "அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது" என்ற ஒரு கருத்து இருப்பதாகவும் அது கூறியது.
'அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது' (Presumption Of Constitutionality) என்ற ஒரு சொல்லானது, சட்டப்பூர்வ விளக்கத்தின் போது நீதிமன்றங்களால் பயன்படுத்தப்படும் ஒரு சட்டப்பூர்வக் கொள்கையாகும்.
சமூகத் தேவைகளைப் பிரதிபலிக்கும் வகையிலான சட்டங்களை உருவாக்குவதற்கு சட்டமன்ற அமைப்புகள் சிறந்த முறையில் தயாராக உள்ளன என்ற நம்பிக்கையில் இந்தக் கோட்பாடு அமைந்துள்ளது.
அரசியலமைப்பு மீறலுக்கான தெளிவான சான்றுகள் இல்லாவிட்டால் நீதிமன்றங்கள் சட்டங்களை நிலைநிறுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
'NDMC மற்றும் பஞ்சாப் மாநிலம்' (1996) இடையிலான வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தக் கோட்பாட்டின் வரம்புகளை முன் வைத்தது.