புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படக் கோருவதற்கான பொது அறிவிக்கை காலத்தைக் குறைத்துள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இது கோவிட்-19 நோய்த் தொற்றினால் ஏற்பட்ட காலதாமதங்கள் காரணமாக 30 நாட்களிலிருந்து 7 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிக்கை காலத் தளர்வானது அசாம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கத் தேர்தல்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படுவதற்கான கடைசி நாள் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.
அசாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகியவற்றிற்கான வேட்பு மனு தாக்கல் செய்யப் படுவதற்கான கடைசி தேதி மார்ச் 19 ஆகும்.
மேற்கு வங்க மாநிலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதற்கான கடைசி தேதி ஏப்ரல் 07 ஆகும்.
இந்த வழிகாட்டுதலின்படி, விண்ணப்பதாரர்கள் 30 நாட்களுக்குள் 2 தேசிய மற்றும் உள்ளூர் நாளிதழ்களில் அவர்களுடைய கட்சியின் பரிந்துரைக்கப்பட்ட பெயரை ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து குறிப்பிட வேண்டும்.
குறிப்பு
அரசியல் கட்சிகளின் பதிவு செய்யப் படுதலானது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 என்ற சட்டத்தின் பிரிவு 29A என்பதின் விதிமுறைகளினால் நிர்வகிக்கப் படுகின்றது.
தேர்தல் ஆணையத்துடன் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவின் கீழ் பதிவு செய்யக் கோரும் ஒரு கட்சியானது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 என்பதின் பிரிவு 29A மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சரத்து 324 ஆகியவற்றினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்தியத் தேர்தல் ஆணையத்தினால் வரையறுக்கப் பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, தங்கள் கட்சி தொடங்கப்பட்ட தேதியுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தல் ஆணையத்திற்கு தங்களது விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.